Pages

நகங்கள் வெள்ளையாக வழிகள்

நகங்கள் வெள்ளையாக வழிகள்

நகங்கள் வெள்ளையாக வழிகள்
posted by hari


பெரும்பாலானோரின் நகங்கள் பொலிவிழந்து, மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிலும் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது அடர் நிற நெயில் பாலிஷ்களை நீண்ட நாட்கள் நகங்களில் வைத்திருந்தாலோ, நகங்கள் பொலிவிழந்து காணப்படும். ஒருசில வீட்டுப் பொருட்களைக் கொண்டு நகங்களை பராமரிக்க முடியும். அவை என்னவென்று பார்க்கலாம்..


• பாலில் நகங்களை 15 நிமிடம் ஊற வைத்து, ஈரமான துணி கொண்டு துடைத்து விட்டு, உலர வைக்க வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்ய வந்தால் நல்ல பலன் கிடைக்கும்..

• எலுமிச்சை பழ சாற்றை, இரவில் படுக்கும் போது நகங்களில் தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து கழுவினால், நகங்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறமானது எளிதில் நீங்கிவிடும். குறிப்பாக இந்த முறையை தொடர்ந்து நான்கு வாரங்கள் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

• சிறிது ஹைட்ரஜன் பெராக்ஸைடில், 2 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து, அந்த கலவையை காட்டன் கொண்டு நகங்களில் தேய்த்தால், மஞ்சள் கறை நீங்கிவிடும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தான் வேண்டும்.

• டூத் பேஸ்ட் பற்களில் உள்ள கறைகளை மட்டுமின்றி, நகங்களில் உள்ள கறைகளையும் போக்க வல்லது. எனவே டூத் பேஸ்ட்டை கறை படிந்த நகங்களில் தேய்த்தால், நகங்களில் வெண்மையாக ஜொலிக்கும்.ஆனால் இவ்வாறு அடிக்கடி செய்ய கூடாது.

• வினிகர் மற்றும் லிஸ்டரினை சம அளவில் எடுத்துக் கொண்டு, அந்த கலவையை காட்டனில் நனைத்து, நகங்களில் மசாஜ் செய்தால், நகங்களில் உள்ள மஞ்சள் கறைகள் படிப்படியாக நீங்கும்.

• பொதுவாக ஆலிவ் ஆயில் சருமம் மற்றும் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை போக்க வல்லது. அத்தகைய ஆலிவ் ஆயில், நகங்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்குவதற்கும் ஏற்றது. ஆனால் இந்த முறையில் நகங்களில் உள்ள கறைகள் நீங்க சற்று நாட்கள் ஆகும். இருப்பினும், இது மிகவும் சிறந்த முறை. அதற்கு வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் சிறிது உப்பு சேர்த்து, அதில் நகங்களை ஊற வைக்க வேண்டும்.
Click to get cool Animations for your MySpace profile