மூலிகை மருத்துவம்
சித்த மருத்துவம் ஓர் அறிமுகம்
மனித உடம்பில் உள்ள 72,000 நரம்பு மண்டலத்திலும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளிலும் எதாவுது ஒரு கோளாறு ஏற்பட்டு முத்தோட உடம்பினால் ஆன பிண்டத்தில் 4448 வியாதிகளில் ஏற்படும் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வியாதிகள் ஏற்படும். அவைகள் சித்த மருத்துவத்தில் முழுமையாக தீர்க்க முடியும். சித்தர்களின் திருவாக்கினால் சொல்லப்பட்ட மூலிகைகள், பாஷைனங்கள், உபரசம் என்று சொல்லப்படும் உப்புகளாலும் பல அறிய மருந்துகள் உள்ளன.
"தழைபாந வேர்பாந தவரினாக்கால் மெல்ல பஸ்பம் செந்தூரம் பாரே" என்று கூறியுள்ளார்கள்.




இக்கால நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பாஷானங்கள் உப்புகள் சரியான தரமில்லாதவைகள். தவிர அவற்றை கொண்டு மருந்து செய்யும் சித்த மருத்துவர்கள் மிகக்குறைவு. சித்த மருத்துவத்தில் மிகத்தாமதமாக தான் நோய் குணமாகும் என்று ஒரு கருத்து உள்ளது. அது முற்றிலும் தவறு. மனித உடல் 67% தண்ணீரும் , 33% சதை, எலும்பு, தசைகளாலும்ஆனது. இதில் வாத உடல், பித்த உடல், கப உடல் என்று மூன்று வகை உள்ளது. அதை நாடி நடைகளால் கண்டறிய முடியும். பிறகு அந்தந்த நோய்க்கு தகுந்தால் போல் மருத்துவம் செய்தால் நோய் தீரும் என்பதில் ஐயமில்லை. எங்களால் மூலிகை, வேர் கடை சரக்குகள் போன்றவற்றில் செய்த எராளமான மூலிகை மருத்துகளால் நோய்களை முற்றிலும் தீர்க்க இயலும்.
அனைத்து வகையான நோய்களுக்கும் சிறந்த மூலிகை மருந்துகளை கொண்டு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.
குழந்தையின்மை:
ஆண்களுக்கு உயிரணுக்கள் குறைவாக உள்ளதாலும், பெண்களுக்கு கருப்பையில் ஆறு விதமான பிரச்சனைகள் உள்ளதாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும். அவை:
கணவன் மனைவி உடலுறவின் போது
- கர்ப்பையில் பாசி பற்றி இருந்தால் தலைவலி உண்டாகும்.
- வாயுவு நிறைதிருந்தால் உடல் வலிக்கும்
- தசை வளர்த்திருந்தால் நெஞ்சில் தத்துவது போல் வலிக்கும்.
- சோரி கட்டி (நீர் கட்டி) இருந்தால் கெண்டைகால் மற்றும் பாதம் வலி ஏற்படும்.
- கர்பபைபயினுள் கொழுப்பு கூடியிருந்தால் ஏப்பம் அதிகம் இருக்கும்.
- கிருமி அதிகம் இருந்தால் முதுகு வலி ஏற்படும்.
இவைகளை ஆண், பெண் இருவருக்கும் நாடி நடையை கண்டறிந்து சக்தி வாய்ந்த முலிகை மருந்துகளால் குணப்படுத்தி புத்திர பாக்கியம் கிடைக்க செய்து வருகிறோம். இதுவரை எங்களது ஆஸ்ரமத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பலன் அடைந்து உள்ளனர்.
by
Hari Prasanth