Pages

ஏவல் பில்லி சூன்யம் Part -I

ஏவல் பில்லி சூன்யம் உண்மையா ,பொய்யா ?

பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும் ஆவிகளில் நல்லவைதீயவை- என்ற இரண்டுமே மந்திரங்களின் சக்திகளுக்கு உட்பட்டவைகளே. அதாவது மந்திரங்கள் ஒரு வித ஒலியை வெளிப்படுத்த அந்த ஒலிக்கு கட்டுப்படுபவை ஆவிகள். மந்திர உச்சாடனையில் இருந்து எழும்பும் ஒலியை  அதிர்வு என்கிறார்கள். இந்த மாதிரியான மந்திரங்கள் நான் முன்னரே கூறி உள்ளபடி அதர்வன் வேதத்தில் உள்ளன. அ வை அபிசார மந்திரங்கள் எனப்படும். அந்த அபிசார மந்திரங்களைப் போலவே மேலும்  பல மந்திரங்கள் உள்ளன. மந்திரங்கள் என்பது வேத காலத்தில் இருந்தே உள்ளவை.  ஆனால் அந்த மந்திரங்களை சரியான முறையுடன் உச்சரிக்க வேண்டும். முறையாக ஓதப்படாத மந்திரங்களுக்கு சக்தி இல்லை. அது மட்டும் அல்லமுறையாக ஓதப்படாத மந்திர  உச்சரிப்புக்களினால் அதை உச்சரித்தவர்களையே திருப்பித் தாக்கும் என்பார்கள்.  ஆகவே மந்திரம் என்பது சாதாரண விஷயமும் அல்ல. அந்த மந்திரங்களை உச்சரிக்கும்போது எழும்பும் ஒலிக் கற்றைகள் ஒரு ஒளி போல காற்றில் பறந்து சென்று அதிர்வு மூலம் அங்கு சுற்றித் திரியும் ஆவிகளை தாக்கி அவற்றை செயலிழக்கச் செய்யும். 


அதைத் தொடர்ந்து ஓதப்படும் மந்திரங்கள் அவற்றைக் கட்டி அந்த மந்திரத்தை ஓதியவரிடம் இழுத்துக் கொண்டு வந்து விட அவர்கள் அதை தம்மிடம் உள்ள மந்திரக் கூடுகளில் பிடித்து வைத்துக் கொண்டு விடுவார்கள் . இப்படியாகத்தான்  மந்திரவாதிகளிடம் பல தீய ஆவிகள் கட்டுண்டு கிடக்கின்றன. அப்படியென்றால் யார் வேண்டுமானாலும்  அந்த மந்திரங்களை ஓத முடியுமா என்றால் அது முடியாது. அதற்கு விசேஷ பயிற்சி தேவை. மேலும் அதற்கென உள்ள தேவதைகளை பூஜித்து  அதன் அருளைப் பெற்றாலே அது அந்த சக்தியை அதனை ஆராதித்தவர்களுக்குத் தரும். அந்த சக்தி தரும் தேவதைகளைப் படைத்தது யார்முன்னரே கூறியபடிதெய்வங்கள்தேவதைகள் என்ற அனைத்தையும் படைத்தது மூன்று அவதாரங்களின் வழித் தோன்றல் அவதாரங்களே.  நல்லவை உள்ள இடத்தில் தீமைகளும் இருக்க வேண்டும் என்பது நியதி என்பதினால் நல்ல தேவதைகளுக்கு மத்தியில் தீய தேவதைகளும் படைக்கப்பட்டு உள்ளார்கள். ஆனாலும் அந்த தீய தேவதைகள் பல நல்ல மனமுடைய அவதாரங்களுக்குக் கட்டுப்பட்டவை. அவற்றினால் அவதாரங்களாய் மீறி எதையும் செய்ய முடியாது. அதனால்தான் செய்வினைகள் நம்மைத் தாக்காமல் இருக்க கால பைரவர்ஹனுமான் போன்றவர்களை வணங்குமாறு அறிவுறுத்துவார்கள்.