Pages

ராகு, கேது யார்?




ராகு, கேது இரு கிரகங்களும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படக் காரணமான கிரகங்களாகும். ஒன்பது கிரகங்களில் இந்த இரு கிரகங்களும் சாயாக் கிரகங்கள் எனப்படும். வானவெளியில் இதற்கென மண்டலங்கள் கொடுக்கப்படவில்லை. வானவெளியில் சூரியனது வட்டப் பாதையும் சந்திரனது வட்டப் பாதையும் வெட்டும் புள்ளிகளே ராகு, கேது என அழைக்கப் படுகிறது. சூரியனுடைய வட்டப் பாதையை சந்திரன் 5 பாகை 9 கலை தூரத்தில் தெற்கு வடக்காக சாய்ந்து நின்று இரண்டு இடங்களில் கடந்து செல்கிறார். சூரியனின் பாதையை சந்திரன் இருமுறை கடந்து செல்லும் இந்த இடமே ராகு, கேது என அழைக்கப்படுகிறது.

   
சூரிய வட்டப்பாதையை சந்திரன் கடக்கும் இடமானது ஒவ்வொரு நாளும் வெவ்வேறாக இருக்கும். சந்திரன் இன்று கடக்கும் இடத்தில் நாளை கடப்பதில்லை. நாளை கடக்கும் இடத்தில் மறுநாள் கடப்பதில்லை. சந்திரன் கடக்கும் இந்த இடமானது ஒரு நாளைக்கு 33 விகலை வீதம் தள்ளிக் கொண்டே வரும். இப்புள்ளியானது ஒரு மாதத்திற்கு 1 பாகை 40 கலை தூரத்திற்கு நகரும். பதினெட்டு மாதத்தில் இது 30 பாகை சென்று விடும். 30 பாகை கொண்டது ஒரு ராசி ஆகும். இதனால்தான் ராகு, கேதுக்கலானது ஒரு ராசியைக் கடக்க 18 மாதங்களாகின்றது. அதாவது 1 1/2 ஆண்டுகளாகின்டறது. பண்ணிரெண்டு ராசிகளையும் ராகு, கேது என்ற வெட்டும் புள்ளி சுற்றிவர பதினெட்டு வருடங்களாகின்றது.


ராகுகாலம் என்று எப்போது?

ஞாயிறு                 04.30 மணி முதல் 06.00 மணி வரை

திங்கள்                  07.30 மணி முதல் 09.00 மணி வரை
செவ்வாய்            03.00 மணி முதல் 04.30 மணி வரை

புதன்                       12.00 மணி முதல் 01.30 மணி வரை.
வியாழன்             01.30 மணி முதல் 03.00 மணி வரை
வெள்ளி                10.30 மணி முதல் 12.00 மணி வரை
சனி                         09.00 மணி முதல் 10.30 மணி வரை.
12ல் ராகு
ஜாதகத்துல 12ல் ராகு இருந்தால் ஆண் என்றால் கெட்டப்பழக்கங்கள் எல்லாமே இருக்கும்..பெண் என்றால் அழகு படுத்திக்கொள்ளவும்வீட்டை அலங்காரம் செய்யவும் ஆடம்பர செலவுகள் செய்வார்..ஆண் கடன் வாங்கியாவது குடிப்பான்..பெண்ணும் அப்படித்தான்...6ல் சுக்கிரன் இருந்தால்,ஆணாய் இருந்தால் பெண்ணுக்கும் பெண்ணாய் இருந்தால் பாய் ஃப்ரெண்டுக்கும் அதிக செலவு செய்வார்கள்...

சுக்கிர திசை ஒருவருக்கு வந்துவிட்டால் அவர் ஆடம்பரத்துக்கும் மோகத்துக்கும் அடிமையாக போகிறார் என்று அர்த்தம் குரு திசையும் இப்படித்தான்...குருவோ,சுக்கிரனோ ராகுவுடன் சேர்ந்து இருந்து திசை வந்து விட்டால் கள்ளக்காதல் கன்ஃபார்ம்.சனி 7ல் இருந்தால் திருமணம் லேட்டாகிறது அப்படி ஆனாலும் வயதில் மூத்தவர்களைத்தான் கல்யாணம் செய்கிறார்கள்..20 வயது பெண்ணுக்கு 40 வயதுக்காரருடன் திருமணம் ஆகிறது!!.



தொடர்புக்கு

ஹாி பிரசா

7305898258